என் கணவரை விமர்சனம் செய்தால் செருப்பால் அடிப்பேன்.. பிரபல நடிகை ஆவேசம்..!
- IndiaGlitz, [Friday,February 17 2023]
எனது கணவரைப் பற்றி விமர்சனம் செய்தால் செருப்பால் அடிப்பேன் என ’புஷ்பா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்திருந்தார் நடிகை அனுசுயா பரத்வாஜ். சின்னத்திரை தொகுப்பாளியானாக இருந்து அதன் பிறகு திரைப்படங்களில் நடித்த இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்கள் உண்டு.
இந்த நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகை அனுசுயா பதிவு செய்திருந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரையும் அவரது கணவரையும் விமர்சனம் செய்தனர். குறிப்பாக ஒரு நெட்டிசன் பணத்திற்காக தான் நீங்கள் இவரை திருமணம் செய்து கொண்டீர்களா என்று கேள்வி எழுப்ப இதனால் கடுப்பான அனுசுயா, ‘பணம் அவரிடம் மட்டும் தான் உள்ளதா? என்னிடம் இல்லையா? இதை நீ சொன்னதற்காக கன்னத்தில் போட்டுக் கொள், இல்லை என்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்தார்.
மேலும், ‘மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சள் ஆகத்தான் தெரியும், பணம் மட்டுமே புத்தியை கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும், தயவுசெய்து மாறுங்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை அனுசுயாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுதியுள்ளது.