நடிகை ரோஜாவை எதிர்த்து போட்டியிடுகிறாரா அஜித், விஜய் பட நடிகை? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தேர்தல் பரபரப்பு விறுவிறுப்பாக உள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியில் நடிகை ரோஜா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதன் பின் அமைச்சர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் நடிகை ரோஜா மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோஜாவை எதிர்த்து பவன் கல்யாண் கட்சியின் சார்பில் நடிகை அனுஷ்கா ஷெட்டியை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தையின் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ‘வேட்டைக்காரன்’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, சூர்யாவின் ‘சிங்கம்’ உள்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை அனுஷ்கா தற்போது திரைப்படங்களில் பெரிய அளவில் நடிக்காத நிலையில் முழு நேர அரசியலில் இறங்குவாரா? நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருப்பினும் இந்த தகவல் ஆந்திர அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com