close
Choose your channels

அந்த இடத்தில் டாட்டூ? நடிகை அனுபமா பரமேஸ்வரன் பதிவிற்கு குவியும் தாறுமாறான கமெண்ட்ஸ்!

Thursday, June 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய சினிமாக்களில் நடித்து, இளம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் தாறுமாறான கமெண்ட்ஸ்களுடன் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய இளசுகளின் மனதையும் கொள்ளையிட்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதைத் தொடர்ந்து தமிழில் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்திலும் நடிகர் அதர்வாவுடன் 'தள்ளிப் போகாதே' திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அதேபோல தெலுங்கு, மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்திவந்த இவர் 'கார்த்திகேயா 2', 'அந்தே சுந்தராணிகி', 'ரவுடி பாய்ஸ்', மணியரயிலே அசோகன்' போன்ற திரைப்படங்களில் நடித்து விமர்சன ரீதியான வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘நடாசர்வபௌமா’ திரைப்படத்திலும் நடிகை அனுபமா நடித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து விட்டது.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவ்வபோது மேக்கப் இல்லாமல் தனது சுருண்ட கூந்தலுடன் புகைப்படங்களை வெளியிடுவார். இதனால் இளைஞர்கள் பலரும் நடிகை அனுபமா பரமேஷ்வரனின் க்யூட்டான புகைப்படங்களுக்கு வரவேற்பு அளித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகை அனுபமா கிராப் டாப் போன்று சற்று கவர்ச்சியான உடையணிந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களா இது? என்று அதிர்ச்சியை பதிவுசெய்து வரும் நிலையில் தற்போது இதயத்திற்கு பக்கத்திலேயே டாட்டூ இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இடத்தில் டாட்டூ–வா? என்று அதிர்ச்சியோடு தாறுமாறான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். கடைசியாக “பட்டர்ஃபிளை’‘ திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது “ஜே.எஸ்.கே“, ‘மரீச்சிகா‘, ‘சைரன்‘, ‘தில்லு ஸ்கொயர்‘ போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment