மனுஷனா மாறுங்கடா... நடிகையின் சாட்டையடி பதிலுக்கு குவியும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Saturday,May 15 2021]

’பொதுநலன் கருதி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் நெட்டிசன் ஒருவரின் மதமாற்ற கேள்விக்கு அளித்த சாட்டையடி பதில் இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது

பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது தெரிந்ததே. அவர் நேற்று ரம்ஜான் திருநாளை முன்னிட்டு முஸ்லிம் பெண் போல் உடை அணிந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பெரும்பாலானோர் வரவேற்று கமெண்ட்ஸ்களை அளித்து வந்த நிலையில் ஒரு நெட்டிசன் மட்டும் ’முஸ்லிம் மதத்திற்கு மாறி விட்டீர்களா? என்ற தொனியில் ’மாறி விட்டீர்களா? என்று கேள்வியை எழுப்பி இருந்தார் 

இதற்கு சாட்டையடி பதில் அளித்த அனுசித்தாரா ஒரே ஒரு வார்த்தையில் ‘மனிதன்’ என்று பதிலளித்துள்ளார். மதம் மாறிவிட்டீர்களா? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்விக்கு ’மனிதனாக மாறிவிட்டேன்’ என்று பதிலளித்த அனுசித்தாராவின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்தது. இதனை அடுத்து மதவெறியுடன் இருப்பவர்கள் ’முதலில் மனுஷனாக மாறுங்கடா’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

More News

தனியா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா? நெட்டிசன்களை அலறவிடும் பிக்பாஸ் நடிகை புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

கொரோனா நிவாரண நிதியாக கவியரசு வைரமுத்து கொடுத்த தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் பொதுமக்கள் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க

சித்தார்த் என்ன நடிகர்களின் பிரதிநிதியா? கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய்நாத் குறித்து நடிகர் சித்தார்த் கடுமையான வார்த்தைகளை கொண்டு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா சிகிச்சை வார்டிலும் பாலியல் வன்கொடுமை? பெண் உயிரிழந்த பரிதாபம்!

இந்தியாவில் கொரோனாவினால் தினம்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

நாளை முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கின்போது,