நியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருந்து வருகிறது என்பதும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உச்சகட்டத்தில் இருப்பதால் தினமும் ஆயிரத்திற்கும் மேலானோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய ’லண்டன்’ மற்றும் ’தகதிமிதா’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை அங்கிதா. இவர் திருமணத்திற்குப் பின் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் செட்டில் ஆகி உள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா நிலை குறித்து நடிகை அங்கிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், கொரோனா வைரஸ் நோயாளிகளால் அமெரிக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி விட்டதாகவும், கேன்சர் உள்பட மற்ற எந்த நோயாளிகளையும் மருத்துவமனைகள் கவனிப்பதில்லை என்று பதட்டமாக கூறியுள்ளார்.
மேலும் அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கூட வெளியே போக முடியவில்லை என்றும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதாகவும் அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார். மேலும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout