நடிகை அஞ்சு குரியன் நிச்சயதார்த்தம்.. வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 29 2024]

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை அஞ்சு குரியனின் நிச்சயதார்த்த விழா நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அஞ்சு குரியன், அதன் பிறகு தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது அவர் பிரபுதேவா நடித்து வரும் உல்ஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அஞ்சு குரியன் மற்றும் ரோஷன் கரிப்பா ஆகியோருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அஞ்சு குரியன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நிச்சயதார்த்த விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இரு தரப்பின் குடும்பத்தினர் உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அடுத்து, ரசிகர்கள் அஞ்சு குரியன் மற்றும் அவரது வருங்கால கணவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ஷில்பா ஷெட்டி ரெஸ்டாரெண்டுக்கு வந்த தொழிலதிபருக்கு ரூ.80 லட்சம் நஷ்டம்.. அதிர்ச்சி தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட வந்த தொழிலதிபரின் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் தொலைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேவிட் வார்னருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபல நடிகை.. செல்பி புகைப்படம் வைரல்..!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை

அஜித்தின் 'விடாமுயற்சி' டீசர் தேதி இதுவா? ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, நேற்று இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதும், இதற்கான பூஜை பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனதும் தெரிந்தது.

'கங்குவா' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்.. 11 காட்சிகளில் மாற்றம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள்

சமந்தாவின் செம்ம ஆக்சன் த்ரில்லர்.. 'சிட்டாடல்' இரண்டாவது டிரைலர் ரிலீஸ்..!

சமந்தா நடித்த 'சிட்டாடல்' என்ற வெப் தொடர் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த தொடரின் டிரெய்லர் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகி