நடிகை அஞ்சு குரியன் நிச்சயதார்த்தம்.. வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை அஞ்சு குரியனின் நிச்சயதார்த்த விழா நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவான "நேரம்" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அஞ்சு குரியன், அதன் பிறகு தமிழில் "சென்னை டு சிங்கப்பூர்", "ஜூலை காற்றில்", சில நேரங்களில் சில மனிதர்கள்", "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது அவர் பிரபுதேவா நடித்து வரும் "உல்ஃப்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அஞ்சு குரியன் மற்றும் ரோஷன் கரிப்பா ஆகியோருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அஞ்சு குரியன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
நிச்சயதார்த்த விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இரு தரப்பின் குடும்பத்தினர் உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அடுத்து, ரசிகர்கள் அஞ்சு குரியன் மற்றும் அவரது வருங்கால கணவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments