மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி: வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காமல் திரை உலகமே ஸ்தம்பித்து போய் இருந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், சமீபத்தில் படப்பிடிப்பு குழுவினர் 100 பேர் வரை கலந்து கொள்ளவும் என மாநில அரசு அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து படப்பிடிப்புகள் ஒவ்வொன்றாக தொடங்கி வருகின்றன என்பதும், ஒருசில பெரிய நடிகர்களும் கூட தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை அஞ்சலி இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேக்கப் அறையில் அவருக்கு மேக்கப் போடுவது போன்ற புகைப்படத்தையும் அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளியான ’நிசப்தம்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து தற்போது அவர் விக்னேஷ் சிவனின் ஆந்தாலஜி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் ‘ஓ’, மற்றும் ‘நேர் கொண்ட பார்வை’ தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Returning to work with all precautions????
— Anjali (@yoursanjali) October 5, 2020
New normal ?? #start #camera #action pic.twitter.com/dInenbVk7y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com