சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய அஞ்சலி.. என்ன ஒரு பேட்டிங்...

  • IndiaGlitz, [Friday,October 21 2022]

நடிகை அஞ்சலி சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன்பின் ’அங்காடி தெரு’ ’மங்காத்தா’ ’அரவான்’ ’சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சலி அதில் தனது கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவருக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் நடிகை அஞ்சலி சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’என்ன ஒரு பேட்டிங்’ என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்: நெட்டிசனுக்கு சின்மயி ஆவேச பதில்!

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான், அது நம்ம ஊரு மக்களின் ரத்தத்திலேயே ஊறியது என்றும் வளர்ப்பும் அப்படி என்றும் சின்மயி தனது குழந்தை குறித்து கமெண்ட் செய்த ரசிகர் ஒருவருக்கு ஆவேசமாக

காலங்கள் மாறும் கனவெல்லாம் மாறும்: 'காபி வித் காதல்' யுவனின் மெலடி பாடல்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'காபி வித் காதல்' என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

வாடி.. போடி.. செருப்பை கழட்டிய ஆயிஷா: கலவர பூமியான பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் 50 நாட்களுக்கு பிறகு நடக்க வேண்டிய சண்டை இரண்டே வாரத்தில் தொடங்கி விட்டது ஒரு பக்கம் ஆச்சரியமாக

ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்: வேற லெவல் போட்டோஷூட்!

தமிழ் திரை உலகில் அழகு மட்டுமின்றி உண்மையாகவே நடிக்கவும் தெரிந்த மிகச்சில நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒவ்வொரு படத்திலும் இவர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் படங்களை மட்டுமே

நிறைய கற்று கொண்டேன்.. ஆறு மாத தாய் அனுபவம் குறித்து காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிவிட்டதை அடுத்து ஆறு மாத கால தாய் அனுபவம் குறித்து கவிதைத்தனமான ஒரு பதிவை அவர் செய்துள்ள நிலையில்