மஞ்சள் காஸ்ட்யூமில் அஞ்சலி: நெட்டிசன்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்கள்!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’அங்காடிதெரு’ ’தூங்கா நகரம்’ ’மங்காத்தா’ ’வத்திக்குச்சி’ ’சேட்டை’ ’சிங்கம் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் அஞ்சலி. சமீபத்தில் அவர் நடித்த ’வக்கீல் சாகேப்’ என்ற தெலுங்குதிரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது வெளியிடும் கிளாமர் மற்றும் அசத்தலான புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறும். இந்த நிலையில் ’எல்லாமே மஞ்சள் தான்’ என்ற கேப்ஷனில் அஞ்சலி சமீபத்தில் வெளியிட்டுள்ள மஞ்சள் சேலை காஸ்ட்யூமில் உள்ள கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்கள் கற்பனைக் குதிரையை பறக்கவிட்டு கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர். அஞ்சலியின் புகைப்படம் மட்டுமின்றி இந்த கமெண்ட்ஸ்களும் ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை அஞ்சலி தற்போது ’ஆனந்த பைரவி’ ’பூச்சாண்டி’ ’சிவப்பு’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்