பாவாடை சட்டையில் பட்டையை கிளப்பும் நடிகை அஞ்சலி!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

தமிழ் திரையுலகில் சிறப்பாக நடிக்க தெரிந்த மிகச் சில நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது தெரிந்ததே. ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் ’அங்காடித்தெரு’ ’தூங்காநகரம்’ ’மங்காத்தா’ ’எங்கேயும் எப்போதும்’ ’சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் அஜித்தின் ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்திலும் ’பூச்சாண்டி’, ‘ஆனந்த பைரவி’, ‘ஷிவப்பா’, ’பீஷ்மா பாவே’ உள்பட ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அஞ்சலி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாவாடை சட்டையில் பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ள அஞ்சலியின் இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து பாஸிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

34 வயதிலும் இன்னும் டீன் ஏஜ் இளம் பெண் போல அஞ்சலியின் தோற்றம் இருப்பதாக பெரும்பாலான ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது