ஷங்கர் திரைப்படத்தில் நடிகை அஞ்சலி வில்லியாக நடிக்கிறாரா? வைரலாகும் தகவல்!
- IndiaGlitz, [Thursday,February 24 2022]
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அஞ்சலி பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் தகவலை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அந்தத் திரைப்படத்தில் நடிகை அஞ்சலி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நடிகை அஞ்சலி பிரம்மாண்ட இயக்குநர் இயக்கிவரும் “ஆர்சி15“ திரைப்படத்தில் இணைந்து நடித்துவருகிறார். தெலுங்கின் முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்கும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் இதில் கதாநாயகியாக கியாரா அத்வானியும் இணைந்துள்ளார். இவர்களைத் தவிர முக்கிய வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும் இவர்களுடன் நடிகர் ஜெயராம். சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த்தும் இணந்துள்ளனர்.
ஆர்சி15 திரைப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதையெழுதி இருக்கும் நிலையில் தமன் இதற்கு இசையமைக்க இருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் எஸ்.ஜே.சூர்யா, நடிகை அஞ்சலி இருவரும் எதிர்மறை காதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Get a job you don’t need a vacation from ????
— Anjali (@yoursanjali) February 19, 2022
On my way to #RC15 sets ????#RC15 #SVC50 #DirectorShankar #Excited #work #love pic.twitter.com/Binh1In94M