நடிகை அஞ்சலியின் புஷ்பாவுக்கு பெருகி வரும் ஆதரவு.. 3 நாட்களில் 35 மில்லியனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அஞ்சலி, புஷ்பா என்ற விலைமாது கேரக்டரில் ஒரு வெப் தொடரில் நடித்திருந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி ’பஹிஷ்கரன்’ என்ற தெலுங்கு வெப் தொடரில் புஷ்பா என்ற விலைமாது கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த தொடர் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே அவர் ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்த நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விலைமாது கேரக்டரில் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ’பஹிஷ்கரன்’ தொடர் வெளியாகி 3 நாட்களில் 35 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளதாக நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஜி5 ஓடிடியில் 3 நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் இல்லை, புஷ்பாவாக நடிப்பதும் சவால் ஆனது, எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது, எங்கள் கதைக்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் ஆதரவு என்னை மேலும் புதிய கேரக்டர்களின் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும். மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி தற்போது ’ஈகை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அவருடைய 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ ராமின் ’ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களிலும் அஞ்சலி நடித்துள்ளார் என்பதும் இந்த படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
❤️@PixelPicturesIN @ZEE5Telugu @Prashmalisetti @iamprajapathi @prasannadop @SidharthSadasi1 pic.twitter.com/BMX5yGNjKz
— Anjali (@yoursanjali) July 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments