நடிகை அஞ்சலிக்கு திருமணமா? இணையத்தில் கசியும் தகவல்கள்!
- IndiaGlitz, [Monday,June 07 2021]
தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கவர்ந்த அவர் அதன்பின் ’அங்காடித்தெரு’ படத்தில் அவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து தூங்காநகரம், மங்காத்தா, வத்திக்குச்சி, இறைவி, பேரன்பு, நாடோடிகள் 2, உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 34 வயதான அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தான் மாப்பிள்ளை என்றும் இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. திருமணம் குறித்து அஞ்சலி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை அஞ்சலி தற்போது ’பூச்சாண்டி’ என்ற தமிழ் படத்திலும் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.