அஞ்சலியின் 50 வது படத்தின் டைட்டில் இதுதான்: செம்ம ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
அஞ்சலியின் 50 வது திரைப்படத்திற்கு ’ஈகை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரீன் அம்யூஸ்மென்ட் மற்றும் டி3 ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அசோக் வேலாயுதம் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவும், தருண்குமார் இசையும், பிரவீன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். பரதன் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மழை பெய்து கொண்டிருக்கும் குடைபிடித்தவர்கள் நடுவே அஞ்சலி இருக்கும் அட்டகாசமான காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to Launch the @yoursanjali 's 50th Film #𝗘𝗲𝗴𝗮𝗶 ⚖️ First Look Poster #EegaiFirstLook all da best team!!
— venkat prabhu (@vp_offl) May 27, 2023
⭐️ing @yoursanjali @YoursKashyap @VijaytvpugazhO@imharibunty @Abinakshatra @Nishanth25r @chandarr1398117
🎬 @Ashokdirector01
🎥 @Sridhar_DOP
🎹… pic.twitter.com/oC1crqYg5V
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com