16 வயதில் மாடல் அழகிகளை ஓரம்கட்டிய அனிகா சுரேந்தர்… வேறலெவல் புகைப்படம்!
- IndiaGlitz, [Saturday,October 23 2021]
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர் தற்போது பல தமிழ் சினிமாக்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்“ திரைப்படத்தில் தல அஜித்தின் ரீல் மகளாக நடித்திருந்தார். இதில் க்யூட்டான தனது குழந்தை சிரிப்பால் தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார்.
பின்னர் அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்“ திரைப்படத்திலும் இவரே நயன்-அஜித்தின் மகளாக நடித்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற அனிகா சுரேந்தர் தற்போது “மாமனிதன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவைத் தவிர சமூகவலைத் தளங்களிலும் அனிகா படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் அவ்வபோது போட்டோஷுட் எடுத்துத் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் ரேஞ்சுக்கு அனிகா வளர்ந்து விட்டதாகக் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். சில சமயங்களில் இவர் உடுத்தும் உடையைப் பார்த்து ரசிகர்கள் சிலர் நெகடிவ்வாக விமர்சித்தும் வருகின்றனர்.
தற்போது வெள்ளை நிறத்தில் கோட் அணிந்துகொண்டு இருக்கும் போட்டோஷுட் புகைப்படங்களை அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கோட் மட்டும் அணிந்து கீழாடை அணியாமல் இருக்கும் இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் “மாடல் அழகிகளை மிஞ்சி விட்டார்” என்று கமெண்ட்டு பதிவிட்டு வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.