கையில இளநீர், கண்ணுல கூலிங்.. மாலத்தீவில் 'குட்டி நயன்' அனிகாவின் செம்ம போட்டோஷூட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகி ஆக நடித்து வரும் குட்டி நயன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் மாலத்தீவு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிதா சுரேந்திரன். இதனை அடுத்து ’விஸ்வாசம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது நாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அனிகா நாயகியாக நடித்த ’ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த படத்தில் அவர் லிப் கிஸ் காட்சிகள் உட்பட பல கிளாமரான காட்சிகளை நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘பிடி சார்’ மற்றும் ’வாசுவின் கர்ப்பிணிகள்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் அனிதா சுரேந்திரன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரது பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கு மேல் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது அனிகா, மாலத்தீவு சுற்றுப்பயணத்திற்கு சென்று உள்ள நிலையில் அங்கிருந்தபடியே கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக கையில் இளநீருடன் கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்த அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout