ஆணாதிக்க சினிமாவை நோக்கி ஆண்ட்ரியா எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா துறை எப்போதும் ஆணாதிக்கம் நிறைந்தது. சமீபத்தில் நான் தரமணி என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்துக்குப் பின்னர் நான் இன்னும் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. ஆனால் விஜய்யுடன் நடிக்கும் ஒரு நடிகை மூன்று பாடல்களுக்கு வந்து நடமாடினார், அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இவ்வளவிற்கும் நான் நடித்த தரமணி படம் அனைவருக்கும் பிடித்திருந்தது. என் நடிப்பை பலர் பாராட்டியிருந்னர். ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கூட வரவில்லை? ஒரு பெண், வலுவான கதாபாத்திரத்தில் நடித்து, அதில் சில கடினமான கேள்விகளை கேட்கும்போது அவருக்கு சோதனை ஏற்படுகிறது. என்னால் வெறும் அழகு பொம்மையாக மட்டும் சினிமாவில் நடிக்க முடியாது. அதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் அதை பலர் ஏற்று கொள்வதில்லை
அழகாகவும், கவர்ச்சியாகவும் நடிக்கும் அதே நேரத்தில் என்னால் நன்றாக நடிக்கவும் முடியும். எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை எழுதுங்கள். வெறுமனே திரையில் வந்து, இடுப்பை ஆட்டி, கவர்ச்சிகரமான உடைகளில் தோன்றுவதற்கு மட்டும் என்றால் என்னை அழைக்க வேண்டாம். அது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.
கதைக்கு தேவை என்றால் என்னால் நிர்வாணமாகக் கூட நடிக்க முடியும். ஆனால் ஒருசிலர் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு கவர்ச்சியாகவும், தன்னைத் தானே காட்சிப்பொருளாக்கிக் கொள்ளவும் செய்கின்றனர். அவர்கள் நடிப்பதை விட கதைக்கு தேவையான வகையில் நிர்வாணமாக நடிப்பது மேல். ஆணாதிக்கமிக்க சினிமா தற்போது மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மிக மிக மெதுவாக.
தீபிகா படுகோனே, நயன்தாரா போன்றவர்கள் இப்போது பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்களும் ஒருகாலத்தில் பெரிய ஹீரோக்களுடன் நடித்து அதன் பின்னர் தான் தற்போது இந்த நிலையை அடைந்துள்ளனர். ஏன் ஒரு நடிகையால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்காமல் வெறும் நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாது?
ஒரு நடிகையின் மதிப்பு அவருடன் நடிக்கும் சக நடிகர்களை வைத்து ஏன் நிர்ணயிக்கப்பட வேண்டும்? 'இவங்க ரஜினியோட படம் பண்ணிருக்காங்க, ரொம்ப பெரிய ஹீரோயின்' என ஏன் சொல்ல வேண்டும்? ஏன் வலுவான, நல்ல கதாபாத்திரங்களில் நடித்து அவரால் பெரிய ஹீரோயினாக முடியாது? இந்த கேள்வியைத்தான் என்னுடைய சினிமா. துறையை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதற்கு பதில் இல்லை' என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout