கறுப்புநிற உடையிலும் இத்தனை பளபளப்பா? வைரலாகும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்பட நடிகை, பின்னணி பாடகி எனப் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி இடத்தை வகித்து வருகிறார். கதாநாயகியாக மட்டும் அல்லாது சிறந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துவரும் இவர், தேவைப்படும் இடங்களில் கவர்ச்சியாகவும் சில நேரங்களில் கதாநாயகிக்கே டஃப் கொடுக்கும் வகையில் துணிச்சலான கேரக்டரில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் “தரமணி“, “ஆயிரத்தில் ஒருவன்“ திரைப்படங்களில் இவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “வடசென்னை“ திரைப்படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் “கா“, “நோ எண்ட்ரி“ போன்ற படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
வித்தயாசமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளில் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், அதுபோன்ற உடைகளை அணிந்து அவ்வபோது சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள ஆடையில் நடிகை ஆண்ட்ரியா பளபளப்பாகக் காட்சி அளிக்கிறார். மேலும் அந்தப் பதிவின் கேப்ஷனாக Shimmer sparkle shine எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com