ஆடை அணியாமல் மகளிர் தின வாழ்த்து சொல்ல வேண்டுமா? ஆண்ட்ரியாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
- IndiaGlitz, [Wednesday,March 08 2023]
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா மகளிர் தினத்திற்கான ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறான விமர்சனங்களைக் கூறிவருகின்றனர்.
பின்னணி பாடகி, போல்டான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் சிறந்த நடிகை என்று பன்முக அடையாளங்களுடன் இளைஞர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவருடைய நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வடசென்னை போன்ற படங்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதோடு பல வைரலான பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் “பிசாசு 2” மற்றும் சயின்ஸ் ஃபிக்சன் சர்வைவல் திரில்லர் படமான “நோ எண்ட்ரி” போன்றவை வெளிவரவிருக்கின்றன.
இந்நிலையில் மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக “இன்றும் என்றென்றும் பெண்ணாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளைநிற ஆடை அணிந்திருக்கும் இவரின் பின்புறம் முழுவதுமாகத் தெரிகிறது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு ஆடையில்லாமல் மகளிர் தின வாழ்த்துகளைக் கூற வேண்டுமா? என நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் கமெண்ட் பதிவிட்ட இன்னொரு நெட்டிசன், நீங்கள் சிறந்த நடிகை மற்றும் பாடகி. சாதாரண பெண்கள் சாதிக்காததை நீங்கள் சாதித்து தேசத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளீர்கள். இப்படியிருக்கும்போது இந்த பெண்ணியவாதிகள் ஏன் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.