மணலுக்கு நடுவே முளைத்திருக்கும் பிரமிடு, கல்லறை… மீண்டும் வைரலாகும் ஆண்ட்ரியா பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாவும் இருந்துவருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் தற்போது எகிப்து நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கிறார். மேலும் எகிப்தின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை சுற்றிப்பார்த்து வரும் அவர் அங்குள்ள பிரமிடுகள், புதைகுழிகள், கல்லறைகள் என அனைத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழில் “ஆயிரத்தில் ஒருவன்“, “மங்காத்தா“, “தரமணி“, துப்பறிவாளன்“, “வடசென்னை“ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரலமானவர் நடிகை ஆண்ட்ரியா. மேலும் பல திரைப்படங்களில் இவர் பின்னணி பாடலையும் பாடியுள்ளார். தொடர்ந்து இசை, நடிப்பு என அசத்திவரும் இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தார். அதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கடும் வைரலானது.
அதைத்தொடர்ந்து தற்போது எகிப்து நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா பாலைவனத்திற்கு நடுவே சுடும் மணல் வெளியில் முளைத்திருக்கும் பல நூற்றுக்கணக்கான பிரமிடுகளை பார்வையிட்டு வருகிறார்.
அந்த வகையில் Saqqara என்பதும் ஒன்று. பழங்கால எகிப்து தலைநகரமாக இருந்த இந்த இடத்தில் பல நூற்றுக்கணக்கான பிரமிடுகள் காணப்படுகின்றன. நைல் நதிக்கு மேற்கில் இருக்கும் இந்த இடம் கொய்ரோவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் Saqqaraவில் மன்னர்களின் கல்லறைகள், ஏராளமான வரலாற்று சுவடுகளும் இடம்பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட 2,500 வருடங்களுக்கு முந்தியதாகக் கருதப்படும் இந்த வரலாற்று சின்னம் குறித்த புகைப்படங்களை நடிகை ஆண்ட்ரியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com