கல்லூரியில் படிக்கும்போது ஆண்ட்ரியா: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,July 08 2021]

கௌதம் மேனன் இயக்கிய ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதன்பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’விஸ்வரூபம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தான் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக அவர் ’நான் ஒரு கல்லூரிப் பெண்ணாக இருந்தபோது, பெரிய பெண்ணாக இருக்க விரும்பினேன். இப்போது பெரிய பெண்ணாக இருக்கிறேன், ஆனால் மீண்டும் கவலையற்ற கல்லூரிப் பெண்ணாக திரும்பிச் செல்ல விரும்புகிறேன்’ என பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண்ட்ரியா சின்ன குழந்தையாக இருக்கும் போது மரக்குதிரையில் உட்கார்ந்து இருந்தவாறு இருந்த புகைபப்டம் உள்பட ஒருசில புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து தற்போது கல்லூரி கால புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.