வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் ஆன்ட்ரியா!

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனுடன் மீண்டும் ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் கம்பெனி தயாரித்து வரும் படத்தை அவருடைய உதவியாளர் ஒருவர் இயக்கி வருவதாகவும், இந்த படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கும் ’பிசாசு 2’ சுந்தர் சி இயக்கி வரும் ’அரண்மனை 3’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார் என்பதும் தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாக ஆண்ட்ரியா நடித்து வரும் நிலையில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு அவருடைய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் இணைந்த நமிதா!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'பிசாசு' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக

தூங்கி, தூங்கி முகம் வீங்கி போச்சா? நடிகை தம்மன்னா கூறும் எக்செலண்ட் டிப்ஸ்!

கொரோனா நேரத்தில் பலரும் நேரம், காலம் பார்க்காமல் தூங்கிக் கொண்டே இருக்கிறோம்.

குரங்கு-பி வைரஸ் வரிசையில் பயமுறுத்தும் இன்னொரு வைரஸ்? அறிகுறிகள் என்ன?

இங்கிலாந்தில் உணவுக்குடலை தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் "நோரோ வைரஸ்" தற்போது

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயராம் கேரக்டர் இதுவா?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் முதல் பாகத்தின் அட்டகாசமான போஸ்டர் நேற்று வெளியாகி

வனிதாவின் அடுத்த கணவர் யார்? ஜாதகத்தை அலசும் குருஜி!

நடிகை வனிதாவின் அடுத்த கணவர் யார் என்பதை அவருடைய ஜாதகத்தை கணித்து குருஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.