வெள்ளைப் பனியில் மின்னும் தமிழ் முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை எனப் பன்முக அடையாளங்களைக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. “பச்சைக் கிளி முத்துச்சரம்“ படத்தில் அறிமுகமான இவர் பின்பு “தரமணி“, “ஆயிரத்தில் ஒருவன்“, “வடசென்னை“ போன்ற பல படங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படும் நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தன்னுடைய வித்தியாசமான குரலால் பல ஹிட் பாடல்களையும் கொடுத்து இருக்கிறார். பின்னணி பாடகி என்பதோடு மட்டுமல்லாது ஆல்பம் வெளியிடுவது போன்ற சில விஷயங்களிலும் தனிக் கவனம் கொண்டு இருக்கும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்திலும் நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் “பிசாசு 2“ படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி உற்சாகமான நடிப்பு, இன்னிசை பாடல் எனத் தமிழ் சினிமாவில் உலா வரும் நடிகை ஆண்ட்ரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்று இருந்தார். காஷ்மீருக்கு சென்ற அவர் அங்குள்ள படகில் பயணம் செய்வது, கொட்டும் பனிக்கட்டிகளை கையில் எடுத்து வைத்து விளையாடுவது, மலை முகட்டில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது எனப் பல விதங்களில் காஷ்மீர் பனிமலையை ரசித்து வருகிறார்.
இப்படி நடிகை ஆண்ட்ரியா காஷ்மீரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments