மருத்துவமனையில் குஷ்பு.. என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட விவரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கடந்த 90களில் இருந்தவர் குஷ்பு என்பதும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பதும், பாஜகவின் முக்கிய பிரமுகராக உள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார். அதில் அவர் இடுப்பு எலும்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் முழுமையாக குணமடைவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் விரைல் குணமாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. 🙏 pic.twitter.com/07GlQxobOI
— KhushbuSundar (@khushsundar) June 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments