டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டரில் அரசியல், சமூக மற்றும் திரைப்படங்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இந்த டுவிட்டர் தளத்தின் மூலம் தனது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கருத்துக்களையும் அவர் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஷ்பு கூறுகையில், ‘எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். டுவிட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.
இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். டுவிட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை" என்று குஷ்பு கூறியுள்ளார்.
சமீபத்தில் குஷ்புவின் இரண்டாவது மகள் ஆனந்தியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பதிவு செய்திருந்தபோது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் குஷ்புவின் மகளை தவறாக வார்த்தையால் திட்டியதும் அதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பு, அந்த நபரை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்ததும் தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com