பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு கார் கொடுத்து உதவிய தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதி எம்.எல்.ஏஆகவும் உள்ளார்.
இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த கா்ப்பிணி ஒருவரை காப்பாற்ற நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா தனது காரை கொடுத்து உதவி அவர் மருத்துவமனைக்கு செல்ல உதவியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் பதட்டத்தில் இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நகரி தொகுதிக்கு கடந்த திங்களன்று அரசு மருத்துவமனைக்கு ரோஜா சென்றார். அப்போது அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க அந்த மருத்துவமனையில் வசதி இல்லை என்பதை அறிந்தார்.
உடனே தன்னுடைய காரை கொடுத்து உடனே அவரை திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்களை அறிவுறுத்தினார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தன்னுடைய காரை கொடுத்து அனுப்பிய நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜாவுக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com