கர்ப்பமுற்ற நிலையில் நீச்சல் குளத்தில் போட்டோஷூட்: கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் கர்ப்பமான நேரத்தில் நீச்சல் குளத்தில் போட்டோஷூட் எடுத்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பெங்காளி மற்றும் இந்தி நடிகை நுஷ்ரத் ஜஹான், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பஷிரத் என்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார் என்பதும், இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை சுமார் 3.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை நுஷ்ரத் ஜஹான் 2019ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஒரு சில நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆனால் ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்படி பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நுஷ்ரத் ஜஹான், நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்த போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments