இது எந்த வகையில் நியாயம்? சென்னை பிரச்சனையை கையில் எடுத்த நடிகை ரோஜா!

  • IndiaGlitz, [Sunday,January 09 2022]

இது எந்த வகையில் நியாயம் என சென்னை பிரச்சனையை நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா கையில் எடுத்துள்ளார்.

கடந்த 80 களில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ரோஜா கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவர் நகரி தொகுதி எம்எல்ஏவாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்துவரும் ரோஜா தற்போது சென்னை - திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை தரமற்று இருப்பதை இரு மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை - திருப்பதி சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது என்றும் இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் ஆனால் சாலையை புதுப்பிக்காமல் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்க வசூல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்றும் இது எந்த வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சாலையை புதுப்பித்த பின்னர்தான் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க வேண்டுமென்ற ரோஜாவின் புகார் தற்போது சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர்களிடம் வந்துள்ளதை அடுத்து விரைவில் இந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கப்பு முக்கியம் பிகிலே..... ராஜூவை வெளியில் இருந்து வாழ்த்தும் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு தற்போது நான்கு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் அதிதிஷங்கர்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், சமீபத்தில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' என்ற படத்தில் நடித்து முடித்தார்

தாமரைக்கு நன்றி சொன்ன பிரியங்கா, பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட தாமரை!

தாமரைக்கு பிரியங்கா நன்றியும் பிரியங்காவுக்கு தாமரை மன்னிப்பும் கேட்ட காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. 

மக்கள் நலனுக்காக கையெழுத்து வேட்டையை தொடங்கி வைத்த கார்த்தி!

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்

இந்த ஆண்டு பாசிட்டிவ்வாக ஆரம்பித்துள்ளது: கொரோனா தொற்றால் பாதித்த தமிழ் ஹீரோவின் டுவிட்!