நான் ஆபாச நடிகையா? பொதுமக்கள் முன் கண்ணீர் வடித்த பெண் அமைச்சர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநில இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர் என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் நான் ஆபாச நடிகையா? என ஆவேசமாக நடிகை ரோஜா கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா என்பவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்றும் லாட்ஜ்களுக்கு சென்று உள்ளார் என்றும் ப்ளூ ஃபிலிம் நடித்து உள்ளார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுகுறித்து ஆந்திர மாநில மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சமீபத்தில் கைது செய்தனர்
இந்த நிலையில் திருப்பதியில் இது குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்த ரோஜா ’அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாததால் என்னைப் பற்றி அவதூறாக பேசுகிறார்கள், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில் இந்த நாட்களில் கூட பெண்களை அடக்குவதில் தெலுங்கு தேசம் பற்றி குறியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியில் நான் 10 ஆண்டுகள் இருந்தேன். அப்போதெல்லாம் எனது கேரக்டர் சரியில்லை என்று புறக்கணிக்கவில்லை. ஆனால் நான் தற்போது கட்சி மாறி அமைச்சராக இருக்கும் நிலையில் என்னை பற்றி அவதூறாக பேசுகின்றனர். ஆபாச படத்தில் நான் நடித்தேன் என்று கூறுவதோடு சட்டமன்றத்தில் மார்பிங் செய்த சிடிக்களை காட்டுகிறார்கள். நான் ஆபாச படத்தில் நடித்த சிடி உங்களிடம் இருந்தால் பொதுமக்களிடம் வெளியிடுங்கள்.
ரெக்கார்ட் டான்ஸ் ஆடியதாகவும் லாட்ஜுக்கு போனதாகவும் ப்ளூ பிலிம் நடித்ததாகவும் முன்னாள் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் என்னைப் பற்றி அவதூறு கூறுகிறார்கள். உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளை இதே போன்ற குற்றச்சாட்டு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் மீதும் வரும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com