செருப்பால அடிப்பாங்க... சாமி தரிசனம் செய்த பின்னர் பேட்டியளித்த ரோஜா..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

ஒரு பெண் மீது தவறான குற்றச்சாட்டு கூறினால் பெண்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’மீண்டும் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காக சாமி தரிசனம் செய்ததாகவும் கண்டிப்பாக மக்கள் தங்களை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று கூறினார். தப்பு செய்தவர் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் அவர் தப்பு செய்தது சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் கூறினார்.

மேலும் தன்னை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் குறித்து பேசி அவர் ’ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரை தூற்றுவது வழக்கமாக உள்ளது, அதுவும் ஒரு பெண்ணான என்னை தவறாக பேசியதை பார்த்து மற்ற பெண்கள் சும்மா இருக்க மாட்டார்கள், செருப்பால் அடிப்பார்கள் என்றும் கூறினார். நடிகை ரோஜாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.