ரோஜாவின் மகளுக்கு இளம் வயதில் கிடைத்த விருது!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா இளம் வயதில் விருது பெற்றுள்ளதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகையும் ஆந்திர மாநிலம் அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் திறமையை வெளிப்படுத்தியதோடு, சிறந்த எழுத்தாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்ஷு மாலிகா எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ‘ஜி டவுன் என்ற இதழில் வெளியானதை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது கிடைத்துள்ளது. அமைச்சர் ரோஜாவின் மகளுக்கு இந்த அரிய விருது இளம் வயதில் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை சஜன் இந்த விருதை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவுக்கு அளித்தார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் ரோஜா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை ரோஜா தனது வாழ்க்கையை திரைப்பட நடிகையாக தொடங்கி அதன்பின் அரசியலிலும் பல ஏற்ற இறக்கங்களை பெற்றார். தற்போது ஆந்திர மாநில அமைச்சராகவும் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஜாவின் மகளும் திரையுலகிற்கு வர வாய்ப்பு இருந்தாலும் அவர் விருப்பப்படி செல்ல நாங்கள் அனுமதித்து உள்ளோம் என ரோஜா - செல்வமணி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments