முகத்தில் விட்ட குத்து.. குத்துச்சண்டை விளையாடிய ரோஜாவின் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடிய புகைப்படங்கள் அவரது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 12வது மினி ரோல் பால் விளையாட்டு போட்டி நடந்த நிலையில் இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா பரிசுகளை வழங்கினார்.
அதன் பின்னரும் 11 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளின் விளையாட்டு போட்டியையும் அவர் நடத்தினார். 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்ற நிலையில் மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய சிகரத்தை தொடவேண்டும் என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண்களுடன் ரோஜா குத்துச்சண்டை விளையாடிய நிலையில் மாணவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தினார். அப்போது தன்னை எதிர்த்து விளையாடிய பெண்ணின் முகத்தில் ரோஜா ஓங்கி ஒரு குத்து விட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் ரோஜாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com