நடுரோட்டில் ஆண் நண்பருடன் சண்டை: சிவராத்திரியில் ஈஷா மையத்திற்கு வந்த நடிகையால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

சிவராத்திரி கொண்டாட கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு வந்த நடிகை ஒருவர் நடுரோட்டில் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சிவராத்திரி கொண்டாடப்பட்டபோது கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு ஏராளமான நடிகைகள் குவிந்தனர் என்பதும் கோலாகலமாக சிவராத்திரி கொண்டாடப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த துணை நடிகை அங்கீதா என்பவர் தனது ஆண் நண்பருடன் கோவை ஈஷா மையத்திற்கு சிவராத்திரி கொண்டாட வந்துள்ளார். சிவராத்திரி முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்க்க திட்டமிட்டு, இருவரும் வாடகை கார் எடுத்து பல இடங்களை சுற்றி பார்த்தனர். இந்த நிலையில் மதுரையில் விடுதி ஒன்றில் தங்கி அங்கிருந்த இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் ராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நடுவழியில் அங்கீதா மற்றும் அவரது ஆண் நண்பர் காரில் சண்டை போட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து காரில் இருந்து இறங்கிய அங்கீதா ஆண் நண்பரை சரமாரியாக திட்டியதாகவும் ஒரு கட்டத்தில் இருவரும் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்த இருவரையும் விசாரணை செய்தனர். அதன்பின் இருவரையும் சமாதானப்படுத்தி காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மதுரை பைபாஸ் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

என் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. இயக்குனர் மோகன் ஜி

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூல் அளவில்

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா? விக்ரம் ரசிகர்கள் குஷி..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரத்தக்காயங்களுடன் சமந்தாவின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ஷங்கர்? 'இந்தியன் 2' படத்தில் திடீர் திருப்பம்..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான விவேக், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் நடித்திருந்தாலும் கமல்ஹாசன் உடன் அவர் ஒரு படத்தில் கூட நடிக்காமல் இருந்தார்.

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் சித்தார்த் - அதிதிராவ் ஹைத்ரி .. திருமணம் எப்போது?

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.