தந்தை மறைவுக்கு பின் நடிகை ரவீனா பதிவு செய்த நெகிழ்ச்சியான வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகை ரவீனா ரவியின் தந்தை ரவீந்திரநாத் சில மணி நேரங்களுக்கு முன்னர் திடீரென காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து திரையுலகினர் பலர் ரவீணாவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரவீணாவின் தந்தை ரவீந்திரநாத் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கு கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தந்தையின் மறைவிற்குப் பின்னர் ரவீணா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது தந்தை ’மூன்றாம் பிறை’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணே கலைமானே’ என்ற பாடலை பாடுவது போன்ற காட்சி உள்ளது. இந்த பதிவில் ரவீனா ’தெய்வம் சதி செய்தது, நீங்கள் எப்போதுமே அம்மா மற்றும் என்னுடன் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.