தமிழகத்தில் பூரண மதுவிலக்கு. நடிகை குஷ்புவின் அதிரடி கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. ஒருசில கட்சிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும் பிரபல நடிகையுமான குஷ்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு கூறியதாவது: "அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் சொல்கிற கட்சி காங்கிரஸ் கிடையாது. எதை செய்தாலும் யோசித்து செய்வோம். மற்ற கட்சிகளை மாதிரி, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று சொல்வது சாத்தியமில்லை. அது அவர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. இது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். இல்லையென்றால், இந்திய முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியுமா? என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments