அதிமுகவில் சேர்ந்த சில நாட்களில் பதவி பெற்ற தமிழ் நடிகை.. ஈபிஎஸ்-க்கு நன்றி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த நிலையில் தற்போது அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் தனது சமூக வலைதளத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவருக்கு அக்கட்சியின் மகளிர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ள நிலையில் காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்க கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கழகத்தை நடத்திச் செல்லும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அய்யா அவர்களின் பொற்கரங்களில் கழகத்தின் மகத்தான வெற்றியை சமர்பிப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com