லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் தமிழ் திரைப்பட நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை தமிழ் திரையுலக நடிகை ஒருவர் நேரடியாக பார்த்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியை நேரடியாக ரஜினிகாந்த், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை எமி ஜாக்சன் பார்த்துள்ளார். இந்த தகவல் திரையுலக மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகை எமிஜாக்சன் ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை நேரடியாக பார்த்து வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை போட்டி நடக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.