எளிமையாக நடந்தது ரஜினி, விஜய் பட நடிகையின் 2வது திருமணம்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகையின் இரண்டாவது திருமணம் எளிமையாக முடிந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரஜினிகாந்த் நடித்த ’2.0’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்கமகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டணம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ம் இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின் எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த எமி ஜாக்சன் தற்போது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

More News

கொலை வழக்கில் கைதான பிரபல நடிகர்.. சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் அதிர்ச்சி புகைப்படம்..!

கொலை வழக்கில் கைதான பிரபல நடிகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் - துரைமுருகன் சர்ச்சை பேச்சு.. மீண்டும் இருவரும் கூறிய கருத்துக்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த புத்தக விழாவில் கலந்து கொண்ட போது மூத்த அமைச்சர் துரைமுருகன் குறித்து

நடிகை இனியாவின் புது துவக்கம்.. துபாயில் பிரமாண்டமான நடனப்பள்ளி..!

தமிழ் திரையுலகில் "வாகை சூடவா" திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பல துறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா புதிதாக நடன பள்ளி துவங்கியுள்ளார்.

21 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. நடிகையின் குற்றச்சாட்டால் பதவி விலகிய பிரபல நடிகர்..!

மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் தன்னை 21 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கட்டாயப்படுத்தியதாக நடிகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அந்த நடிகர், பொதுச் செயலாளர்

அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சி.. தமிழகத்தில் 'கோட்' சிறப்பு காட்சி உண்டா?

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சி அல்லது சிறப்பு