கர்ப்பிணி நடிகைக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தெறி', 'தங்கமகன்', 2.0' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமிஜாக்சன் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் நேற்று அவரது நிச்சயதார்த்தம் லண்டனில் சிறப்பாக நடந்தது.

நடிகை எமிஜாக்சன் கடந்த சில ஆண்டுகளாக லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். ஜார்ஜ்-எமி திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென கர்ப்பமானார். இது எதிர்பாராத கர்ப்பம் என்றாலும் நாங்கள் பெற்றோர்களாக முடிவு செய்துவிட்டோம் என்று எமிஜாக்சன் கூறியுள்ளார். அவருக்கு வரும் டிசம்பர் மாதம் பிரசவம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜார்ஜ்-எமி நிச்சயதார்த்தத்தில் நண்பர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழா குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.