திருமதி ஹிட்லர்: ஜீடிவியில் அம்பிகா நடிக்கும் புதிய தொடர்!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

ஜீ டிவியில் நேற்று முதல் ’திருமதி ஹிட்லர்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடர் ஆரம்பமாகியுள்ளது. மாலை 6,30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

திருமதி ஹிட்லர் என்ற தொடரில் ஹாசினி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தனாவும், ஏஜே என்ற கேரக்டரில் அபிநவ் ஜனார்த்தனமும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் அமித் பார்கவ், பேராசிரியர் ஞானசம்பந்தம், நடிகை அம்பிகா, சௌமியா, ஸ்ரீ சுப்புலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஆயுஷ்மான் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடரை எஸ். என்.ராஜ்குமார் இயக்குகிறார்

நம் வாழ்க்கையையும் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையும் ஒரு இலகுவான மனநிலையோடும், புதுமையாகவும் காணவேண்டும் என்பதே இந்த தொடரின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் மக்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஆதரவு… எடப்பாடி பழனிசாமி உறுதி!!!

கொரோனா காலத்தில் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக இருந்து வந்தது. இதனால் கொரோனா தாக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஓடிடியில் மாதவனின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை

சித்ராவின் கடைசி நாள் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ வைரல்!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதியில் நாசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

தொண்டர் ஆரம்பித்த கட்சிக்கு தலைவர்: எம்ஜிஆர் பாணியில் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' என்றும் அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வால்; மாலை மரியாதை செய்த படக்குழு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றனர்