'இந்தியன் 2' படத்தில் இதை செய்திருக்கலாம்.. படத்தை தூக்கிய பின் ஐடியா கொடுத்த நடிகை அம்பிகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கடந்த 12ஆம் தேதி ரிலீசான கமல்ஹாசனின் ’இந்தியன் 2’திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்பட்டு விட்டது. சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ வசூல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் நடிகை அம்பிகா நேற்று இந்த படத்தை பார்த்ததாக கூறி இந்த படத்தில் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்று ஐடியா கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் குவிந்ததால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்திற்கு கூட்டம் குறைந்தது.
மேலும் படம் நீளமாக இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 12 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாததால் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்த நடிகை அம்பிகா இந்த படத்தை பார்த்ததாக கூறி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். ’இந்தியன் 2’ படம் பார்த்தேன், எனக்கு பிடித்திருந்தது, ஆனால் படத்தின் நீளம் 15 நிமிடங்கள் இன்னும் குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. கடின உழைப்பு, நடிப்பு ,அதிக செலவு செய்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிந்தது’ என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 12 நிமிடங்கள் குறைத்துள்ள நிலையில் இன்னும் 15 நிமிடங்கள் இந்த படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என பல விமர்சகர்கள் தெரிவித்த நிலையில் அதே கருத்தை தான் நடிகை அம்பிகாவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian parthen...enakku pidichudhu...15 min length reduce seyalam
— Actress Ambika (@ActressAmbika) July 25, 2024
Appadeennu feel.seythen avalavu thaan....hard wrk...acting...lot of money...theriyudhu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com