மாலத்தீவு டூரை முடித்த அமலாபால்.. பிறந்த நாளை எங்கே கொண்டாடியிருக்கார் பாருங்கள்!

  • IndiaGlitz, [Thursday,October 27 2022]

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்த சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்கள் உள்பட பல கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் தற்போது மாலத்தீவு டூரை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக லண்டனில் இருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் நேற்று அமலாபால் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் லண்டனில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். லண்டனில் பிறந்த நாள் உடையுடன் விதவிதமான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றன. மேலும் திரையுலகினர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை அமலாபாலுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’கேடாவர்’ என்ற திரைப்படத்தில் நடித்த அமலா பால் அதன் பின்னர் மம்முட்டியுடன் ’கிறிஸ்டோபர்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.