close
Choose your channels

கையில் சரக்கு பாட்டிலுடன் பார்ட்டி பண்ணிய தமிழ் நடிகை… வைரலாகும் வீடியோ!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலாபால். இவர் “மைனா“, “வேட்டை“ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் நடிகர் விக்ரமுடன் “தெய்வத் திருமகள்“, நடிகர் விஜய்யுடன் “தலைவா“, நடிகர் தனுஷுடன் “வேலையில்லா பட்டதாரி“, நடிகர் சூர்யாவுடன் “பசங்க 2”, நடிகர் ஜெயம்ரவியுடன் “நிமிர்ந்து நில்“ எனத் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி எனப்பல மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் “குட்டி ஸ்டோரி” ஆந்தலாஜி திரைப்படத்தில் நடித்து இருந்தார். மேலும் ரத்னகுமார் இயக்கத்தில் “ஆடை“ திரைப்படத்தில் நடித்தற்குப் பிறகு இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் தெலுங்கில் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இதைத்தவிர சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை அமலா பால் அவ்வபோது போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை அமலாபால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பேச்சுலர் பார்ட்டியில் கலந்து கொண்டு கையில் சரக்குப் பாட்டிலுடன் செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் இவரை படு மோசமாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில ரசிகர்கள் நடிகை அமலாபாலின் சேட்டையை ரசித்து பாசிட்டிவ் கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை அமலாபாலின் சகோதரர் அபிஜித் பால் விரைவில் அவருடைய காதலியை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான பேச்சுலர் பார்ட்டியில்தான் நடிகை அமலாபால் கையில் சரக்குப் பாட்டிலுடன் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment