close
Choose your channels

கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத அமலாபால்.. என்ன காரணம்?

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலா பால் கேரள மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்ற போது அவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பழமொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அமலா பால் என்பதும் குறிப்பாக விஜய் நடித்த ’தலைவா’ திரைப்படத்தில் இவர் தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் என்ற கோயிலுக்குள் சென்று உள்ளார். அப்போது இந்துக்களை மட்டுமே இந்த கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமலாபால் அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து குற்றஞ்சாட்டி உள்ள நடிகை அமலா பால் 2023 ஆம் ஆண்டிலும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இருப்பது வருத்தமாக உள்ளது என்றும் கோவிலுக்கு சென்று தரிசிக்கவில்லை என்றாலும் அம்மனின் ஆற்றலை என்னால் உணர முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கோவிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் தான் கோவிலுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment