இரட்டை குழந்தைக்கு தாயாகிய நடிகை அமலா பால்.
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் 2010ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி பிறகு மைனா படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை அமலாபால்.மேலும் நிமிர்ந்து நில், தெய்வத்திருமகள், ராட்சசன், வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துக் கொண்டார்.
இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்,கடைசியாக இவர் பிரித்விராஜ்யுடன் இனைந்து நடித்தது ஆடு ஜீவிதம் படம்.அதற்கிடையில் இயக்குனர் எ.ல் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.அப்போதே ஆடை என்னும் படத்தில் நடித்தார்.அதன் பிறகு ஒரு சில காரணங்களால் தனது கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.
பிறகு ஒரு நீண்ட இடைவெளி விட்டு நடிகை அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட போது பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர்.
சிறிது மாதத்திற்கு முன்பாக அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.இறுதியாக தான் இரட்டை குழந்தைக்கு தாய் ஆகியுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com