நடிகை அமலாபாலின் கடற்கரை கிளாமர் போட்டோஷூட்! வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபு சாலமன் இயக்கிய ’மைனா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அமலாபால், அதன்பின்னர் தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’அதோ அந்த பறவை’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலாபால் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்து உள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கில் லைக்ச் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களுக்கு சுமார் மூன்று இலட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவில் அவர் ’ஒரு பெண் தனது மனம், உடல் மற்றும் அனைத்து நிலையையும் அறிந்து கொள்ளவும், நேசிக்கவும் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவராக இருக்கிறார் என்றும், ஒரு பெண் தனது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய விழிப்புணர்வில் கவனம் செலுத்தினால் அவருக்கு அமைதி, அன்பு, மகிழ்ச்சி பேரார்வம் மிகுந்த வாழ்க்கையை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு பெண் தான் விரும்பும் எதையும் செய்யும் திறன் கொண்டு இருக்கிறாள் என்றும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு நன்றி உணர்வுடன் இருப்பதோடு ஊக்கமளிக்கும் நபராகவும் இருக்கிறார் என்றும் அமலாபால் பதிவு செய்துள்ளார். அமலாபாலின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments