திருமண விழாவிற்கு ஸ்பெஷலான அலங்காரம்… வைரலாகும் நடிகை அமலாபால் பிக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலாபால். “மைனா“ திரைப்படத்தின் மூலம் தமிழ் இளசுகளின் நெஞ்சங்களைக் கவர்ந்துவிட்ட இவர், அதற்குப் பின்பு “சிந்து சமவெளி“, “வேட்டை“, “காதலில் சொதப்புவது எப்படி“ போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக மளமளவென வளர்ந்து விட்ட இவர் நடிகர் விக்ரமுடன் “தெய்வத் திருமகள்“, தளபதி விஜய்யுடன் “தலைவா“, நடிகர் ஜெயம்ரவியுடன் “நிமிர்ந்துநில்“, நடிகர் சூர்யாவுடன் “பசங்க 2“, நடிகர் தனுஷ்ஷுடன் “வேலையில்லா பட்டதாரி“ என வரிசையாக கலக்கத் துவங்கிவிட்டார்.
இப்படி தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம்வந்தபோதே இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின்னர் ஒரிரு வருடங்களில் மனக்கசப்பு காரணமாக இந்த ஜோடி விவாகரத்துச் செய்து கொண்டதும் ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். திருமண முறிவுக்குப் பிறகு ஒடிந்துபோய் விடாமல் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இயக்குநர் ரத்தன்குமார் இயக்கத்தில் “ஆடை“ திரைப்படத்தில் தில்லாக நடித்து இருந்தார்.
“ஆடை“ படத்தில் நடிததற்காக வரவேற்பு பெற்ற நடிகை அமலாபால் சில எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இதனால் அவர் நடித்திருந்த “அதோ அந்த பறவை“ திரைப்படம் இன்னும் வெளிவராமல் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத நடிகை அமலாபால் இறுதியாக ஆந்தலாஜி “குட்டி ஸ்டோரி“ யில் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் அடுக்கடுக்கான வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய சகோதரர் அபிஜித் பால் மற்றும் அவருடைய காதலி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் படு உற்சாகமாக கலந்துகொண்ட நடிகை அமலாபால் தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
மேலும் பாரம்பரிய முறைப்படி சர்ச்சிற்கு செல்லும் நிகழ்விற்கு தன்னை ஸ்பெஷலாக அலங்கரித்துக் கொண்ட நடிகை அமலாபாலின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களுக்கு எப்போதும்போல ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments