30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேமிரா முன் அமலா: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

கடந்த 90களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவரும் நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலா, 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பின் கேமரா முன் நடிகை அமலா நடிக்கும் காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் நிறுவனம் நடிக்கும் 18ஆவது திரைப்படத்தில் அமலா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் இந்த திரைப்படத்தில் ஷர்வானந்த் நாயகனாகவும் ரிது வர்மா நாயகியாகவும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த திரைப்படத்தை ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை அமலாவுக்கு இயக்குனர் ஸ்ரீகார்த்திக் காட்சியை விளக்குவது போன்று உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கேமரா முன் நடிகை அமலா தோன்றும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.