சமந்தா விவகாரத்தில் ஆவேசமான அமலா.. ராகுல் காந்திக்கு முக்கிய கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அமலா, ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெலுங்கானா அமைச்சர் சுரேகா பேசியது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகார்ஜுனா, சமந்தா, நாக சைதன்யா, நானி, ஜூனியர் என்டிஆர் உள்பட பலர், அமைச்சருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது கருத்துகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், சமந்தாவின் முன்னாள் மாமியார் அமலா தனது சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் சுரேகாவுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். "ஒரு பெண் அமைச்சர் இப்படி அரக்கி போல பேசலாமா? காஞ்சுரிங் பேய் போல பொய்யான குற்றச்சாட்டுகளை ஒரு பெண் மீது எப்படி சுமத்தலாம்?
எனது குடும்பத்தை பற்றியும், எனது கணவர் பற்றியும் கூட சுரேகா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி அவர்களே, தயவு செய்து இந்த அமைச்சரை உங்கள் கட்சியில் இருந்து நீக்குங்கள். பெண்களுக்கும் நல்ல குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் இந்த பிறவிகளை மன்னிக்கவே கூடாது," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கும் நடிகை அமலா தனது பதிவை டேக் செய்துள்ள நிலையில், அவர் மீது கட்சியின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Shocked to hear a woman minister turn into a demon, conjuring evil fictions allegations, preying on decent citizens as fuel for a political war.
— Amala Akkineni (@amalaakkineni1) October 2, 2024
Madam Minister, do you rely and believe people with no decency to feed you utterly scandalous stories about my husband without an iota…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com